விருதுநகர் நகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அகமது நகரில் 10.5 லட்சம் செலவில் வாறுகால் அமைக்கும் பணியும் நடக்கிறது. இதில், பகுதிநேர நகராட்சி ஒப்பந்ததாரர் 8 அடி பள்ளத்தில் கான்கிரீட் போடும் பணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியுள்ளார்.
கரோனா போன்ற பேரிடர் காலத்தில் வீட்டில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பணியில் ஈடுபடுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒப்பந்த தொழிலை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிட முடியாதது"- கண் கலங்கிய நீதிபதி கிருபாகரன்!