ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: விருதுநகர் அருகே பாலம் உடைந்து வெள்ளப்பெருக்கு! - The bridge is broken and flooded near Virudhunagar

விருதுநகர்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நான்கு கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு
author img

By

Published : Nov 16, 2019, 1:39 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது.

இதனால், கூமாபட்டி - பிளவக்கல் அணைக்குச் செல்லும் முக்கியச் சாலையில் உள்ள கோவிந்தமேடு பாலத்துக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பாலம் உடைந்து வெள்ளப்பெருக்கு

இதனால், கிழவன் கோயில், வண்ணாரப்பாறை, பட்டுப்பூச்சி ,பிளவக்கல் அணை உள்ளிட்ட 4 கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுத் தவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து கிலி ஏற்படுத்திய யானைக் கூட்டம் விரட்டியடிப்பு

Intro:விருதுநகர்
16-11-19

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

Tn_vnr_02_heavy_rain_bridge_damage_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிப்பு. 4 கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் கூமாபட்டி - பிளவக்கல் அணைக்கு செல்லும் முக்கிய சாலையில் ரஹ்மத் நகர் பகுதியில் உள்ள கோவிந்தமேடு பாலம் மேலே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்தது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் வந்து கொண்டிருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிழவன் கோயில், வண்ணாப்பாறை, பட்டுப்பூச்சி ,பிளவக்கல் அணை உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு தவித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.