விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு மீனவர் தொழிலாளர் சங்கம் சார்பில், இலங்கையில் சிங்கள ராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் நான்கு பேருக்கு உரிய நீதி கிடைக்கக் கோரியும், மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாவன:
- இலங்கை ராணுவ கடற்படை கப்பலால் மோதி படுகொலைசெய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் நான்கு பேரின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.5 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்,
- சர்வதேச சட்ட விதிகளின்படி இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்,
- இறந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,
- மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கச்சத்தீவை மீட்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் போடப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும்,
- 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டங்களை இலங்கை அரசு திரும்பப்பெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:தாயை கொலை செய்த கல்லூரி மாணவர் கைது