நாடு முழுவதும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து பொது வேலைநிறுத்தமும் மறியல் போராட்டமும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மத்திய அரசு, தொழிலாளர்களுக்கு விரோதமான கொள்கைகளைக் கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, வங்கி, தொலைபேசி, சேலம் உருக்காலை போன்றவற்றை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இப்போராட்டத்தில் பெண்கள், முதியவர்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க :