கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (24). இவரும் விருதுநகர் அருகே செந்நெல்குடியை சேர்ந்த கருப்பசாமி(57) என்பவரும், கட்டனார்பட்டி தனியார் கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் நேற்று (செப்டம்பர் 7) மாலை ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கருப்பசாமி, விஷ்ணுவை அருகிலிருந்த சம்பட்டியால் தாக்கி விட்டு, அங்கிருந்து சென்றார். பின்னர் விஷ்ணு மயக்க நிலையில் இருப்பதை கண்ட சக ஊழியர்கள், அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் விஷ்ணு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கருப்பசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் சக ஊழியரை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி ஊழியர் மினி பேருந்தில் சிக்கி உயிரிழப்பு!