ETV Bharat / state

டாஸ்மாக் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு! - MADRAS HIGH COURT

மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர்நீதிமன்றம் -கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2024, 10:23 PM IST

சென்னை: மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மட்டுமல்லாமல் கடையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "கடந்த 18 ஆண்டுகளாக டாஸ்மாக் பணியாளர்களாக பணியாற்றி வரும் சுமார் 24 ஆயிரத்து 986 ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படாத நிலையில், தனிப்பட்ட மற்ற ஊழியர்கள் செய்யும் சிறு தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி மருத்துவ கல்லூரிக்கு ரூ.20 லட்சம் அபராதம் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இதுமட்டும் அல்லாது, "காலணி ஆதிக்கத்தில் தான் இதுபோல தனிப்பட்ட நபர்களின் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக தண்டனைகள் விதிக்கப்பட்டது. ஒருவர் செய்யும் தவறுக்கு அனைவருக்கும் தண்டனை விதிப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

ஆகையால் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த சுற்றறிக்கையை ரத்து செய்து, அதற்கு தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், இந்த வழக்கு நாளை (நவ.12) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.