மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கல்லில் மாநில அளவிலான சேவல் சண்டை போட்டி நடைபெற்றது.
இதில் சென்னை, விழுப்புரம், நாமக்கல், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் - கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய வெளி மாநிலங்களிலிருந்தும் இரண்டாயிரம் சேவல்கள் பங்கேற்றன.
10 பந்தல்களில் 75 மோதல் களங்கள் அமைக்கப்பட்டு சேவல்கள் மோதவிடப்பட்டன. சேவல்களுக்குப் போதைப்பொருள்கள் வழங்கக் கூடாது, பந்தயம் கட்டக்கூடாது, ஜாக்கிகள் மது அருந்தியிருக்கக் கூடாது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், போட்டியில் பங்கேற்கும் சேவல்கள் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனவா என்பதை உடல் பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுடைய சேவல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
ஒவ்வொரு போட்டியிலும் களம்கண்ட சேவல்கள் சீறிப்பாய்ந்து சண்டையிட்டது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
ஒவ்வொரு போட்டியும் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட நிலையில், போட்டியின் முடிவில் திடகார்த்தமாக இருக்கும் சேவல் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, இரண்டு சேவல்கள் தேர்வுசெய்யப்பட்டு பிரிட்ஜ், எல்.இ.டி. டிவி பரிசாக வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: கரூரில் சேவல் சண்டை போட்டிகள் தொடக்கம்!