விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "தேமுதிக அதே எழுச்சியோடுதான் செயல்படுகிறது. வெற்றி தோல்வி என்பது வந்துபோகும். மீண்டும் தேமுதிகவைத் தூக்கி நிறுத்துவோம்.
மக்கள் எங்களைத் தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்காததால், தேர்தலில் தோல்வியுற்றோம். தேமுதிகவுக்கான வாக்கு வீதம் அப்படியே உள்ளது. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். தேமுதிக ஆரம்பித்ததன் லட்சியம் நோக்கிப் பயணிப்போம்.
திமுகவுடனான கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும். ஸ்டாலின் நல்ல திட்டங்களை கொண்டுவந்து சிறப்பான ஆட்சி செய்கிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நலமாக உள்ளது. பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் கொஞ்சநாள் ஆகும். எங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்துவருகிறோம். மக்களைச் சந்திக்க வேண்டிய நேரத்தில் விஜயகாந்த் சந்திப்பார்" என்றார்.