நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டுவரும் அம்மா மருந்தகத்தில், மருந்து வாங்க வருபவர்களை அலட்சியமாக நடத்துவதாகவும், மருந்து சீட்டைப் பார்க்காமலேயே, மருந்து இல்லை எனக் கூறுவதாகவும், ஊரடங்கு கால கட்டத்திலும் மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருள்கள் அரசு நடத்திவரும் மருந்தகத்திலேயே இல்லை என்பது வருத்தமளிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, மக்களிடம் அலட்சியமாகப் பேசிய மருந்தாளுநர் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மருந்தகம் தவிர மற்ற கடைகள் திறந்தால் கடும் நடவடிக்கை