விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நெப்போலியன். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரும் நண்பர்களாக இருந்துவந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குணசேகரனிடம் நெப்போலியன் கடனாக பணம் வாங்கியிருந்த நிலையில் அதனை குணசேகரன் திரும்ப கேட்டுள்ளார்.
ஆனால், நெப்போலியன் பணத்தை தராததால் கடந்த 2008ஆம் ஆண்டு இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, குணசேகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நெப்போலியனை குத்தி கொலை செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முத்துசாரதா, நண்பனை கொலை செய்த குணசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சாட்சி விசாரணை தொடங்கியது