சிவகாசியை சேர்ந்த குமரேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை புலிப்பாறைபட்டியில் செயல்பட்டுவருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் சிறியரக பட்டாசு வெடிகள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கு பத்துக்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது உராய்வினால் ஏற்பட்ட தீ விபத்தில் புலிப்பாறைபட்டியைச் சேர்ந்த குருசாமி (35) என்பவர் படுகாயம் அடைந்தார்.
இவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். மேலும் சிவகாசி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
சிவகாசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.