விருதுநகர்: சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட மொத்த 48 வார்டுகள் உள்ளன. இதில் 24 வார்டுகள் திருத்தங்கல் பகுதியில் உள்ளது. மேலும், இவைகள் நான்கு மண்டலமாக உள்ளது. இதில் இரண்டு மண்டலம் திருத்தங்கலில் உள்ளது. திருத்தங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு மண்டலங்களில் வீடுகளில் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு பல முறைகேடுகள் நடைபெற்றதாக 5ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி, நகராட்சி நிர்வாக ஆணையாளர் பொன்னையன் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட மாநில நகராட்சி நிர்வாக ஆணையாளர் பொன்னையன் உத்தரவின் பேரில் சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்திக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
அதில் குறிப்பிட்டவை என்னவென்றால், சிவகாசி மாநகராட்சிக்குட்ட திருத்தங்கலிலுள்ள இரண்டு மண்டலத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு என்ன முறைகேடு உள்ளது. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பில் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு.
சிவகாசி மாநகராட்சி நிர்வாகத்திற்கு கேடு மற்றும் குந்தம் விளைவித்த சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பணி மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு வழங்கியுள்ளார்.