ETV Bharat / state

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.. - சிவகாசி செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து
author img

By

Published : Jan 19, 2023, 1:47 PM IST

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 140 தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரசாயன மூலப் பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் திருத்தங்கல்லை சேர்ந்த ரவி என்ற பட்டாசு தொழிலாளி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாமுவேல் ஜெயராஜ் என்ற தொழிலாளி படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் ஒரு அறை தரைமட்டமானது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சிவகாசி கிழக்கு போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் விபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பட்டாசு தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் கோர விபத்து.. 9 பேர் உயிரிழப்பு..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.