ETV Bharat / state

சாத்தூர் வெடி விபத்து வழக்கு: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது - FIREWORKS FACTORY BLAST

FIREWORKS FACTORY BLAST: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் ஆலை உரிமையாளரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஆலை உரிமையாளர் கைது
ஆலை உரிமையாளர் கைது
author img

By

Published : Jan 8, 2022, 9:47 PM IST

FIREWORKS FACTORY BLAST: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் கடந்த 5ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஏழாயிரம் பண்ணை காவல் நிலைய காவல் துறையினர் ஆலை உரிமையாளர் பூமாரி, கருப்பசாமி, ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகிய ஐந்து பேர் மீது அஜாக்கிரதையாகச் செயல்பட்டது, உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த நான்கு பேரை இரண்டு தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் விஜயகரிசல்குளத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பூமாரியை கைதுசெய்துள்ள காவல் துறை ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரன் ஆகிய மூவரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: திருச்சி மாநகராட்சி மேயர் பதவி: கே.என். நேரு மனசுல யாரு?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.