ETV Bharat / state

காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுப்பு - sivakasi news

விருதுநகர்: சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tn vnr girl child murder  சிவகாசி எட்டு வயது சிறுமி கொலை  சிவகாசி செய்திகள்  sivakasi news  sivakasi eight yr old girl body found in forest area
சிவகாசி சிறுமி படுகொலை
author img

By

Published : Jan 21, 2020, 3:31 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் எட்டு வயது சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவர் படிக்கும் பள்ளி உள்பட பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததையடுத்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சிறுமியைத் தேடி வந்த காவல்துறையினர், சிறுமியை சடலமாக அக்கிராமத்தின் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் கண்டெடுத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவருடைய கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்துக் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

மேலும், சிறுமியின் கொலைக்குக் காரணமானவர்களை விரைந்து கைது செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எட்டு வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு பயிலும் நான்கு மாணவிகள் மாயம்

Intro:விருதுநகர்
21-01-2020

8 வயது சிறுமியை கொலை செய்து உடலை காட்டுப்பகுத்திக்குள் வீசிச் சென்ற கொடூரம்

Tn_vnr_03_girl_child_murder_photo_script_7204885Body:சிவகாசி அருகே 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு காட்டுப்பகுத்திக்குள் வீசிச் சென்ற கொடூரம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் சுந்தரம் என்பவரது மகள் கீர்த்தனா (8) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு பயின்று வரும் நிலையில் நேற்று மாலை முதல் காணாமல் போனதால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிவகாசி டவுண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் சிறுமியை தேடி வந்த காவல்துறையினர் சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரம் காட்டுப்பகுதிக்குலிருந்து சடலமாக மீட்டனர்.
அதை தொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?? அவருடைய கொலைக்கான காரணம் என்ன?? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுமியின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.