இராஜபாளையத்திலிருந்து மதுரை தேசிய நெடுச்சாலையில் காயகுடி ஆறு அருகே தனியார் இரும்புக்கடையில் காவலாளியாக காசிம் என்ற முதியவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இன்று இவர் டீ குடிப்பதற்காக அருகில் உள்ள கடைக்கு சாலையின் ஓரமாக நடந்துசென்றபொது, ஸ்ரீவில்லிபுதூரிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த கார் ஒன்று முதியவர் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் முதியவர் தூக்கி வீசப்பட்ட இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தற்போது இந்த விபத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.