சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் தொடர் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு (நவ.30) புயல் கடல் கரையை கடந்த நிலையில் ஒருவழியாக அனைத்து மாவட்டகளும் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் கனமழை பொழிவின் காரணமாக தமிழகத்தில் ஆங்காகே உள்ள நீர் நிலைகள் நிரம்பு சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆறு போன்ற நீர் நிலை வழி ரயில் பாதைகளில் செல்லும் ரயில் சேவைகள் இன்று( டிச.2) ரத்து செய்யப்பட்டுள்ளன.
Due to suspension of Bridge 452 (Between Vikravandi & Mundiyampakkam) & water rising above danger level the following Express trains are fully cancelled and diverted
— Southern Railway (@GMSRailway) December 2, 2024
Passengers are requested to kindly take note on this#SouthernRailway #CycloneFengal #chennairain pic.twitter.com/mrJMUibJ4g
இதன் அடிப்படையில், விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில் பாலத்தில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் உயர்ந்திருப்பதால், பின்வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூர் - நாகர்கோவில் (ரயில் எண். 20627 ) செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று காலை 05:00 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட இருந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூர் - மதுரை (ரயில் எண். 22671) செல்லும் வந்தே தேஜஸ் எக்ஸ்பிரஸ் இன்று காலை 6:00 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட இருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூர் - புதுச்சேரி (ரயில் எண். 06025 ) செல்லும் ரயிலானது இன்று காலை 06:35 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்படத் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி (ரயில் எண்: 22675) செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து காலை 07:45 மணிக்கு புறப்பட இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விழுப்புரம் - தாம்பரம் மெமு பாசஞ்சர் (ரயில் எண்: 06028) விழுப்புரத்தில் இருந்து 05:20 மணிக்குப் புறப்பட இருந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- புதுச்சேரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 16116 ) புதுச்சேரியில் இருந்து 05:35 மணிக்கு புறப்பட இருந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இந்த ரயில்களின் மறுமார்க்கமாக: நாகர்கோவில் - சென்னை எழும்பூர் (ரயில் எண். 20628) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், நாகர்கோவிலில் இருந்து 14:20 மணிக்கு புறப்பட இருந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மதுரை - சென்னை எழும்பூர் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 22672) மதுரையில் இருந்து 15:00 மணிக்கு புறப்பட இருந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூர் - மதுரை (ரயில் எண்: 12635) வைகை எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 13:50 மணிக்கு புறப்பட இருந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூர் காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 12605 ) சென்னை எழும்பூரில் இருந்து 15:45 மணிக்கு புறப்பட இருந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 20665 ) சென்னை எழும்பூரில் இருந்து 14:50 மணிக்கு புறப்பட இருந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரம், கடலூரில் வெள்ளநீர் சூழ்ந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு...ரத்து செய்யப்பட்ட,மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள் விவரம்!