விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூனங்குளம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். நேற்று (அக.9) இரவு குறைப்பிரசவம் ஆன ஏழு மாத பெண் குழந்தையின் உடலை அப்பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தையின் உடலை போட்டுச்சென்றது யார்? எதற்காக போட்டு சென்றார்கள்? கொலை செய்து எரிந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.