ETV Bharat / state

விருதுநகர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்! - virudhunagar district news in tamil

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 2,370 வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.

sending-of-voting-machines-in-virudhunagar-is-in-full-swing
விருதுநகர்: வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்!
author img

By

Published : Apr 5, 2021, 8:00 PM IST

விருதுநகர்: தமிழ்நாட்டில் நாளை (ஏப்.6) 16ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி இன்று வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்கள் சுமார் 11,376 பேர் அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 2,370 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 11,376 பேர் வாக்குப் பதிவு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 270 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

இதில், 50 விழுக்காடு வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 300க்கும் மேற்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ராமநாதபுரம் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.