ETV Bharat / state

வன அலுவலர் தோட்டத்தில் ஒரு டன் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் - வனத்துறை விசாரணை!

பந்தபாறை அருகே அமைந்துள்ள வன அலுவலருக்கு சொந்தமான தோட்டத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக்கட்டைகளின் மதிப்பு ரூ. 50 லட்சம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

sandal tree
sandal tree
author img

By

Published : Dec 17, 2020, 10:42 PM IST

விருதுநகர்: மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் வனத்துறை அலுவலருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு டன் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பந்தபாறை பகுதியில், கோயம்புத்தூர் மாவட்டம் கொழுமம்பட்டி வனச்சரகத்தில் வன அலுவலராக பணிபுரியும் ஆரோக்கியசாமி என்பவர், தனது மனைவி பெயரில் தோட்டம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு டன் சந்தன மரக்கட்டைகள்

இந்நிலையில், இவரது தோட்டத்தில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தோட்டத்தில் உள்ள அறைகளை சோதனை செய்ததில், சுமார் ஒரு டன்னுக்கும் மேலான சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட சந்தன மரக்கட்டைகள் சுமார் 50 லட்சத்திற்கு மேல் இருக்கும் எனவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது, வன அலுவலர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும், மாவட்ட வன உதவி அலுவலர் அல்லிராஜ் தலைமையில் மோப்ப நாய்கள் வர வழைக்கப்பட்டு, வனத்துறையினர் தோட்ட பகுதி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்படும் - ஒரு நபர் ஆணையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.