விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 70 ஆயிரத்து 996 ஆகும்.
இதில், நடைபெற்ற தேர்தலில் 7 தொகுதிகளில் 12 லட்சத்து ஆயிரத்து 418 பேர் வாக்கு செலுத்தி உள்ளனர்.
இதையடுத்து, 7 சட்டப்பேவைத் தொகுதிகளில் 2,370 வாக்குப்பதிவு மையங்களிலில் இருந்து 11 ஆயிரத்து 108 வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர் ஸ்ரீவித்தியா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொதுப் பார்வையாளர் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் மேற்பார்வையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.