ETV Bharat / state

சாலைப் பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு - விருதுநகரில் விழிப்புணர்வுப் பேரணி

விருதுநகர்: சாலை பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விருதுநகரில் பள்ளி மாணவ, மாணவியர் பேரணியில் ஈடுபட்டனர்.

பேரணி
author img

By

Published : Jul 19, 2019, 12:38 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள விக்டோரியா மேல்நிலைப்பள்ளி தொடங்கி 125 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே, 125ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

பள்ளி மாணவ, மாணவியரின் மாபெரும் விழிப்புணர்வு பேரணி

இந்தப் பேரணியில், சாலைப் பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு குறித்து பதாகை ஏந்திய பரப்புரை நிகழ்த்தப்பட்டது. மேலும், இதில் பெண் சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றையும் விளக்கும் பதாகைகளை மாணவ, மாணவியர் கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வுப் பேரணி சென்றனர்.

விக்டோரியா மேல்நிலைப்பள்ளி நடத்திய இந்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதில், சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

Intro:விருதுநகர்
18-07-19

சாலை பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து 3000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.
Body:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 125 ஆவது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது 3000 மேற்பட்டோர் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம்  சிவகாசியில் நகரின் முக்கிய பகுதியில் விக்டோரியா ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி
செயல்பட்டு வருகிறது சுமார் 125 ஆண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியில் கல்வி பயின்றவர்கள் பல்வேறு அரசியல் மற்றும் அரசு அதிகாரிகளாகவும் வெற்றி பெற்றுள்ளனர் இந்தப் பள்ளியின் 125வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாகவும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இதில் பெண் சிசுக்கொலை பாலியல் வன்கொடுமை பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை  போன்றவற்றை விளக்கும் விதமாக மாணவ மாணவிகள் பதாகைகளை கையில் ஏந்தியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  நகரின் முக்கிய வீதிவிதமாக ஒயிலாட்டம், கோலாட்டம் ஆடியபடியே மாணவ மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள்வழியாக பேரணியாக சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.