தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத்துறை மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்த கரோனா பரிசோதனை, தடுப்பு ஊசி செலுத்துதல் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்கள் முகக்கவசம் அணியவும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறித்திவருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரோனா பாதிப்பு, பரிசோதனை, மருத்துவ சிகிச்சை குறித்து அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் சாத்தூர் தலைமை மருத்துவ அலுவலர் கேசவன் தலைமையிலான குழுவினர் உரிய தகவல்களை தெரிவித்தனர். கரோனா தொற்று பரவாமல் இருக்கவும் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 டன்னாக அதிகரிப்பு