ETV Bharat / state

ஊராட்சித் தலைவர் பதவிக்காக வங்கி மேலாளர் கொலை - ஏழு பேர் சிறையில் அடைப்பு! - ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை

விருதுநகர்: ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேரை வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊராட்சி தலைவர் பதவிக்காக வங்கி மேலாளர் கொலை
ஊராட்சி தலைவர் பதவிக்காக வங்கி மேலாளர் கொலை
author img

By

Published : Dec 13, 2019, 11:57 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரம் எழுந்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் (27) அதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பு என்பவரும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் சதீஷ்குமாரை சரமாரியாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஏழாயிரம் பண்ணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோட்டைப்பட்டியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ராமசுப்பு (47), அவரது ஆதரவாளர்களான கணேசன், முத்துராஜ், சுப்புராம், ஆனந்தராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்களை சாத்தூர் நீதிமன்ற நீதிபதி சண்முகவேல்ராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்கள் ஏழு பேரையும் வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ஏழு பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Intro:விருதுநகா்
13-12-19

ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை வருகிற 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

Tn_vnr_01_murder_judgement_vis_script_7204885Body:சாத்தூர் அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டி ஊர் கூட்டத்தில் தட்டிக் கேட்ட வங்கி மேலாளர் அடித்துக் கொலை. அதிமுக கிளைச் செயலாளர் உள்ளிட்ட 7 பேர் மீது 4 பிரிவுகளின் வழக்கு பதிவு.

7 பேரை வருகிற 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நடத்திய கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரத்தில் தட்டிக்கேட்ட வங்கி மேலாளர் ஒருவர் நள்ளிரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார். சாத்தூர் அருகே உள்ளது கோட்டைப்பட்டி ஊராட்சி. இங்கே 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நள்ளிரவு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்பொழுது அதே ஊரைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலர் ராமசுப்பு என்பவர் தான் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதேநேரம் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப்புராம் என்பவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு வாங்கி வந்துள்ளார். இக்கூட்டத்திற்கு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்க படாமல் ராமசுப்பு தனக்கு வேண்டிய நபர்களை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் சதீஷ்குமார் (27) அக்கூட்டத்திற்கு சென்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பு மற்றும் அவரது ஆட்கள் சிலர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் சதீஷ்குமார் உயிரிழந்தார்.
தகவலறிந்த வெம்பக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரபாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்
மேலும் இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டை பட்டியை சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ராமசுப்பு (47) மற்றும் அவரது ஆதரவாளர்களான கணேசன், முத்துராஜ், சுப்புராம், ஆனந்தராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் சாத்தூர் ஜே.எம்.1 நீதிமன்ற நீதிபதி சண்முகவேல்ராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். ஏழாயிரம்பண்ணை போலீசார் . ஏழு பேரையும் வருகிற 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து 7 பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.