தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு விதியை மீறி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சிக் கடைகள் செயல்படுவதாக நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவின்படி நகராட்சி சுகாதாரத் துறை பணியாளர்கள் ராஜபாண்டி, சரவணன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். இதையடுத்து, முழு ஊரடங்கில் விதியை மீறி செயல்பட்ட மூன்று இறைச்சிக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
மேலும், விதியை மீறி செயல்பட்ட இரு கடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஒரு கடைக்கு 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.