ETV Bharat / state

ரே‌ஷன் அரிசி கடத்திய ரைஸ் மில் அதிபர் கைது! - ரே‌ஷன் அரிசி மூட்டைகளை கடத்திய ரைஸ் மில் அதிபர் கைது

விருதுநகர்: அல்லம்பட்டி பகுதியிலுள்ள அரிசி ஆலைக்கு கடத்தி வரப்பட்ட 2,200 கிலோ ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஆலையின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

ration_rice
ration_rice
author img

By

Published : Dec 21, 2019, 12:38 PM IST

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், ஆங்காங்கே சட்டவிரோதமாக அரிசி கடத்தப்பட்டுவருகிறது. இந்த வேளையில் விருதுநகர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் புலனாய்வு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ, குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் லோகநாதன் தலைமையிலான அலுவலர்கள் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அல்லம்பட்டி பகுதியிலுள்ள தனியார் அரிசி ஆலை முன் மினிவேனிலிருந்து வேன் ஓட்டுநர் அரிசி மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தனர். இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அந்த அரிசி மூட்டைகள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி என்று தெரியவந்தது.

இது தொடர்பாக ஆலையின் உரிமையாளர் கண்ணன் (45), ரேஷன் அரிசி கடத்தி வந்த வேன் ஓட்டுநர் அழகுமூர்த்தி (44) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கடத்தி வரப்பட்ட 2,200 கிலோ ரேஷன் அரிசியையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: மோதிரம் திருடியதால் கண்டித்த தந்தை: மனமுடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை!

Intro:விருதுநகா்
21-12-19

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல். ரைஸ் மில் உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது

Tn_vnr_01_ration_rice_seized_photo_script_7204885Body:விருதுநகரில் ரைஸ் மில்லுக்கு கடத்தி வரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரைஸ் மில் உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ மற்றும் போலீசார், குடிமைப்பொருள் வழங்கல் துறை பறக்கும் படை அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அல்லம்பட்டி பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில் முன் வேனில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையில் அது ரேஷன் கடையில் இருந்து ரைஸ் மில்லுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரைஸ் மில் உரிமையாளர் அல்லம் பட்டியை சேர்ந்த கண்ணன் (45) மற்றும் ரேஷன் அரிசி கடத்தி வந்த வேன் ஓட்டுநர் பாண்டியன் நகரைச் சேர்ந்த அழகுமூர்த்தி (44) ஆகியோரை கைது செய்தனர். மேலும் வேனில் கடத்தி வரப்பட்ட 2,200 கிலோ ரேஷன் அரிசி யையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் சக்திவேல் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.