ETV Bharat / state

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு வைத்திருந்த கட்டடத்திற்கு சீல்! - விருதுநகர் மாவட்டச் செய்திகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயணபுரத்தில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள பட்டாசு, கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி பண்டல்கள் வைத்திருந்த கட்டடத்திற்கு தனி வட்டாட்சியர் சீல் வைத்துள்ளார்.

crackers building sealed
சிவகாசியருகே சட்டவிரோதமாக பட்டாசு வைத்திருந்த கடைக்கு சீல்
author img

By

Published : Oct 14, 2020, 11:20 AM IST

விருதுநகர்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசு ரகங்கள் அட்டைப்பெட்டியில் பேக்கிங் செய்யப்பட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் லாரி மூலம் அனுப்பப்படுவது வழக்கம்.

அந்த லாரி செட் நிறுவனத்தினர் பட்டாசு பேக்கிங் அட்டைப்பெட்டிகளை வைக்கும் கட்டடத்திற்கு அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்பது விதி.

ஆனால், மெத்தனப்போக்குடன் பல லாரி செட் நிறுவனத்தினர் அரசிடம் அனுமதி பெறாமல் உள்ளனர். இந்நிலையில், சிவகாசி அருகே நாராயணபுரத்தில் கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன கட்டிடத்தில் அரசின் அனுமதியின்றி 1,500 பண்டல்கள் பட்டாசு வைக்கப்பட்டிருப்பதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்பின்னர், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளின் தனி வட்டாட்சியர் லோகநாதன் தலைமையில் வருவாய் மற்றும் காவல்துறையினர் அந்தக் கட்டடத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு அனுமதியின்றி பட்டாசு பண்டல்கள் வைத்திருந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து அக்கட்டடத்து வருவாய் துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

இதையும் படிங்க: ஜவுளிக்கடையில் பயங்கர தீ - ஒரு கோடி மதிப்பிலான பொருள்கள் நாசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.