விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலை, ரயில்வே மேம்பாலம் அருகே கோயில் நூற்பாலை செயல்பட்டுவருகிறது.
இந்தப் பகுதியில் ஏற்கனவே மதுபான கடை செயல்பட்டுவந்தது. மக்களின் போராட்டத்தை அடுத்து அந்தக் கடை அகற்றப்பட்டது. மீண்டும் இந்தப் பகுதியில் மதுபான கடை செயல்படுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது.
இதையடுத்து தற்போது கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோயில், தொழிற்சாலை உள்ளதால் பெண்கள் அதிகளவு வந்து செல்லக்கூடிய இந்த இடத்தில் மதுபான கடை செயல்படக் கூடாது. மாவட்ட நிர்வாகம் மதுபான கடையை உடனடியாக மூடவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கோயில் அருகே மதுபான கடையை அகற்ற கோரிக்கை
விருதுநகர்: ராஜபாளையம் நகராட்சிக்குள்பட்ட கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.