ETV Bharat / state

ரூ.30க்கு, 80 கி.மீ. பயணம் - விரைவில் வருகிறது ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் - ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் விற்பனை

விருதுநகர்: மூலிகை பெட்ரோல் வருகின்ற 27 ஆம் தேதி முதல்கட்டமாக நான்கு மாவட்டங்களில் விற்பனைக்கு வரவுள்ளது என்று ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

ராமர் பிள்ளை
ராமர் பிள்ளை
author img

By

Published : Feb 22, 2020, 6:06 AM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், ”உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மூலிகை பெட்ரோல் (மாற்று எரிபொருள்) விருதுநகர், தேனி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் வருகிற 27 ஆம் தேதி முதல்விற்பனைக்கு வரவுள்ளது.

அரசு நிர்ணயம் செய்த 30 ரூபாய் விலையில் பொதுமக்களுக்கு இந்தத் திட்டம் கிடைக்கும். மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்திவருகிறேன். சென்னை, கன்னியாகுமரியில் இதற்கான உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

ராமர் பிள்ளை செய்தியாளர் சந்திப்பு

உச்ச நீதிமன்றம் இதை யாரும் தடை செய்யக்கூடாது என கூறியுள்ளது. அந்த உத்தரவின் பெயரில் கழிவுநீர் மூலம் பயோ ஃப்யூலை தயார் செய்கிறோம். இதன்மூலம் வாகனங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இருக்காது.

இந்த பெட்ரோல் மூலம் இரண்டு சக்கர வாகனங்கள் 80 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யலாம். அதேபோல் புகையும் குறைவதால் புகை மாசும் வராது. மார்ச் 30 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் மூலிகை பெட்ரோல் கிடைக்க முயற்சி செய்துவருகிறோம்.” என்றார்.

இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் பதுக்கிவைத்திருந்த குடோனில் தீவிபத்து - ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.