ETV Bharat / state

அரசு நலத்திட்ட உதவிகளை  வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் : முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

rajenthira balaji speech
author img

By

Published : Nov 21, 2019, 3:31 PM IST

விருதுநகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு 593 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, விலை இல்லா ஆடு, முதியோர் ஓய்வூதியம், உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் உட்பட 1 கோடியே 31 லட்சத்து 55 ஆயிரத்து 688 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், விழாவில் பேசிய அமைச்சர் தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு உரிய பட்டா வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும், எந்த வகையான புறம்போக்கு நிலத்தில் மக்கள் வசித்து வந்தாலும் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் நீர்வழி கண்மாய் போன்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரியும் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி அனைவருக்கும் வழங்கப்படும் ஒரு தொகுதிக்கு 2 ஆயிரம் முதியோர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.‌ ஆனால், தொகுதிக்கு 200 முதியோர்கள் மட்டுமே விண்ணப்பித்து வருகின்றனர். அதே போல் முதியோர் உதவித் தொகை பெற 50 ஆயிரம் வருமான உச்சவரம்பில் இருந்து, தற்போது ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமான முதியோர்கள் பயன்பெறுவார்கள் என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க:

பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

Intro:விருதுநகர்
21-11-19

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

Tn_vnr_01_rajenthira_balaji_vis_script_7204885Body:விருதுநகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு 593 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, விலை இல்லா ஆடு, முதியோர் ஓய்வூதியம், உழைக்கும் பெண்களுக்கு மானிய விலை இருசக்கர வாகனம் உட்பட 1,31,55,688 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு உரிய பட்டா வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும் எந்த வகையான புறம்போக்கு நிலத்தில் மக்கள் வசித்து வந்தாலும் இந்த மக்களுக்கு பட்டா வழங்க கோரி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் நீர்வழி கண்மாய் போன்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அனைவருக்கும் வழங்கப்படும்
ஒரு தொகுதிக்கு 2000 முதியோர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.‌ஆனால் தொகுதிக்கு 200 முதியோர்கள் மட்டுமே விண்ணப்பித்து வருகின்றனர். அதே போல் முதியோர் உதவி தொகை பெற 50,000 வருமான உச்சவரம்பில் இருந்து தற்போது ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமான முதியோர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.