ETV Bharat / state

அனைத்து கட்சிகளும் ஒத்தைக்கு ஒத்தை போட்டு பாத்திருவோம் - சவால் விடும் அமைச்சர்! - ராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகர்: உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு, யாருக்குப் பலம் அதிகம் என்று பார்த்துவிடலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளார்.

rajendra balaji pressmeet at viruthunagar
author img

By

Published : Nov 20, 2019, 2:49 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயப் பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ரஜினி - கமல் இணைந்தாலும் அவரது ரசிகர்கள் இணைய மாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்னைகள் உள்ளன. ரஜினி, கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். அதிமுகதான் வெல்லும்; இரட்டை இலைதான் வெல்லும்.

ராஜேந்திர பாலாஜி பேட்டி

திமுக கூட்டணியில் பிரச்னைகள் உள்ளதால், அக்கூட்டணி விரைவில் உடையும். திருமாவளவன் கோயில் சிற்பம் குறித்து எதார்த்தமாக பேசியிருப்பார். அவர் பேச்சுக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும். அவ்வாறு போட்டியிட்டு யாருக்குப் பலம் அதிகம் என்று பார்த்துவிடலாம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட தயார். இதேபோல், அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட தயாரா; அவர்களுக்குத் திராணி உள்ளதா” என்று கேள்வியெழுப்பினார்.

இதையும் படிங்க: முதலமைச்சருடன் ஐக்கிய அரபு நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பு

Intro:விருதுநகர்
20-11-19

வருகிற உள்ளாட்சித் தேர்தலில் எல்லாக் கட்சியும் தனித்து நின்று போட்டியிடலாம் யாருக்கு பலம் அதிகம் என்று பார்த்துவிடலாம் - பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அனைத்து கட்சிகளுக்கும் சவால்

Tn_vnr_01_rajenthira_balaji_byte_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய பாசனத்திற்காக பிளவக்கல் பெரியாறு அணையை திறந்து வைத்த பின் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ரஜினி கமல் ஒன்று சேர்ந்தாலும் அவரது ரசிகர்கள் சேரமாட்டார்கள் எனவும், ரசிகர்கள் மத்தியில் பல பிரச்சினைகள் உள்ளது எனவும் தெரிவித்தார். ரஜினி கமல் ஒரு முடிவு எடுத்தால் மக்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். அதிமுக தான் வெல்லும் இரட்டை இலை தான் ஜெயிக்கும் என தெரிவித்தார். திமுக கூட்டணியில் தான் பிரச்சனைகள் உள்ளது திமுக கூட்டணி விரைவில் உடையும், அதிமுகவில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார். தொடர்ந்து பேசியவர் திருமாவளவன் கோயில் சிற்பம் குறித்து எதிர்ச்சையான வார்த்தையில் தான் பேசி இருப்பார் எனவும், திருமாவளவன் வார்த்தையில் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
எல்லாக் கட்சியும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்க வேண்டும் யாருக்கு பலம் இருக்கும் என்று பார்த்துவிடலாம் என அமைச்சர் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட தயார் இதேபோல் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட தயாரா தனித்து போட்டியிட்டால் அவர்களுடைய திராணி என்ன என்று தெரியும் என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.