விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகேயுள்ள கூனாங்குலம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ் (28). இவர் 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் காவலராகப் பணியில் சேர்ந்தார். ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராகப் பணியாற்றிவந்தார்.
இந்நிலையில், காளிராஜ் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த தளவாய்புரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து காளிராஜன் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் காவல் துறையினர் விசாரணையில், காளிராஜ் சிறுவயதிலிருந்து தோல் வியாதியால் பாதிக்கப்பட்டுவந்ததாகவும் நீண்ட நாளாக சிகிச்சைப் பெற்றும் குணம் அடையாததால் மனம் வெறுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானதன் காரணமாக கடந்த இரண்டு மாதமாக பணிக்கு வராமல் இருந்த அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:குழந்தை இல்லாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட தம்பதி