விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் பகுதி பேருந்து நிலையம், தளவாய் புரம், இளம்திரைகொண்டான், கொல்லக்கொண்டான், மூகவூர், சுந்தரராஜபுரம், யூனியன் அலுவலகம் அருகே கம்மா பட்டி, நக்கனேரி மற்றும் பல்வேறு பகுதிகளில் இரண்டு முறை பலத்த சத்தத்துடன் நேற்று லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பதறியடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர்.
பின்னர், இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை வட்டாட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை இயக்குநருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் உறுதி செய்யப்பட்டு சிறிய அதிர்வு ஏற்பட்டது உண்மைதான் என கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.