திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஏப்ரல்.14) ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்த திடீர் கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆம்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதமான காற்று வீசியது. அதைத் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கும் மேலாக கனமழை பெய்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளான மெயின்பஜார், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சென்னை
சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை புறநகர் வாசிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இதையும் படிங்க: கோடை மழையால் குளிர்ந்த மக்கள்