ETV Bharat / state

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் - Opposition to garbage disposal in Virudhunagar

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
author img

By

Published : Jan 21, 2020, 11:20 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெரு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் இரவில் குப்பையை கொட்டி தீ வைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், இந்த பகுதியில் உள்ள சிலர் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டினர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் - திருவண்ணாமலை செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். பின்னர், கொட்டி வைத்திருந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

இதையும் படிங்க: நகராட்சி அலுவலக குப்பை கிடங்கில் தீ விபத்து

Intro:விருதுநகர்
21-01-2020

தெரு பகுதிகளில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Tn_vnr_02_public_issue_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெரு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் மர்ம நபர்கள் குப்பையை கொட்டி இரவு நேரங்களில் தீ வைத்துவிட்டு செல்வதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு மற்றும் காற்று மாசுபாடு ஏற்பட்டு சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள ஒரு சிலர் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் -திருவண்ணாமலை செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். பின்னர் கொட்டி வைத்திருந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்து அப்புறபடுத்தினர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.