ETV Bharat / state

சிவகாசியில் தயார்நிலையில் உள்ள தீபாவளி பட்டாசு பரிசுப் பெட்டிகள்! - தீபாவளி பட்டாசு

விருதுநகர்: சிவகாசியில் இந்தாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு விதவிதமான பட்டாசு பரிசுப் பெட்டிகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Deepavali Gift Boxes , சிவகாசியில் பட்டாசு பரிசு பெட்டிகள் தயாரிப்பு
author img

By

Published : Oct 17, 2019, 10:27 AM IST

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், அதன் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விதவிதமான பரிசுப் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

தீபாவளி பண்டிகை தினத்தன்று நம் வீட்டிற்கு வரும் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு இனிப்புப் பலகாரம் சோ்த்து, பட்டாசு பரிசுப் பெட்டிகளை கொடுக்கும் கலாசாரம் ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் உடன் சோ்த்து பட்டாசு பெட்டிகளையும் கொடுப்பதும் வழக்கமாகி வருகின்றது. அதேபோல் கிராமங்களில் தீபாவளி சீட்டு நடத்துபவா்கள் தங்களுடைய வாடிக்கையாளா்களுக்கும், ஜவுளிக் கடைகள் அதிக அளவில் துணி எடுக்கும் வாடிக்கையாளா்களுக்கும் பட்டாசு பரிசுப் பெட்டிகள் கொடுத்து கொண்டாடுகின்றனர்.

Deepavali Gift Boxes , சிவகாசியில் பட்டாசு பரிசுப்பெட்டிகள் தயாரிப்பு

இந்த பரிசு பெட்டிகள் ரூ. 175 முதல் ரூ. ஆயிரத்து 200 வரை பட்டாசு கடைகளில் கிடைக்கின்றது. மேலும் ரூ. 500 வரை உள்ள பரிசுப் பெட்டி முற்றிலும் குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்படுகின்றன.

ரூ. 575 மதிப்புள்ள பரிசுப் பெட்டியில் 40 வகையான பட்டாசுகள் இடம்பெற்றிருக்கும். இதில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தரப்பினரும் பயன்படுத்தும் பட்டாசுகளும் இருக்கும். பரிசுப் பெட்டியில் விலைக்கு ஏற்ப பட்டாசு வகைகள் வைக்கப்படுகின்றன. கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பரிசுப் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அதே சமயம் இந்த பரிசுப் பெட்டிகளின் விலையும் 5 முதல் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.
இதையும் படிங்க: கிளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறை!

Intro:விருதுநகர்
17-10-19

தீபாவளி பண்டிகைக்கு வித விதமான பட்டாசு பரிசு பெட்டி தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Tn_vnr_01_crackers_gift_box_vis_script_7204885Body:விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு வித விதமான பட்டாசு பரிசு பெட்டி தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி என்பது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதே போல் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வித விதமான பரிசு பெட்டி தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிக்கை தினந்தன்று நம் வீட்டிற்கு வரும் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு இனிப்பு பலகாரம் சோ்த்து பட்டாசு பரிசு பெட்டி கொடுக்கும் கலாச்சாரம் ஆண்டு ஆண்டுக்கு பெருகி கொண்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போன்ஸ் உடன் சோ்த்து பட்டாசு பரிசு பெட்டி கொடுப்பதும் வழக்கமாகி வருகின்றது. அதே போல் கிராமங்களில் தீபாவளி சீட்டு நடத்துபவா்கள் தங்களுடைய வாடிக்கையாளா்களுக்கும் மற்றும் ஜவுளி கடைகளில் அதிக அளவில் துணி எடுக்கும் வாடிக்கையாளா்களுக்கும் பட்டாசு பரிசு பெட்டி கொடுக்கின்றனா். அதே போல் சாலையோர பட்டாசு கடைகளில் லாரி டிரைவா்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு சென்று வரும் வெளி மாநிலத்தவா்கள் என அதிக அளவில் இந்த பரிசு பெட்டி வாங்கி செல்கின்றனா். மேலும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தீபாவளி பரிசாகவும் இந்த பரிசு பெட்டி கொடுக்கின்றனா். இந்த பரிசு பெட்டி ரூபாய் 175 முதல் ரூபாய் 1200 வரை பட்டாசு கடைகளில் கிடைக்கின்றது. மேலும் ரூபாய் 500 வரை உள்ள பரிசு பெட்டி முற்றிலும் குழந்தைகளுக்கவே தயாரிக்கப்படுகின்றன. 575 ரூபாய் மதிப்புள்ள பரிசு பெட்டியில் 40 வகையான பட்டாசுகள் இடம்பெற்றிருக்கும் இது சிறியவர் முதல் பெரியவர்கள் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் பட்டாசுகளும் இருக்கும். இந்த பரிசு பெட்டியில் விலைக்கு ஏற்ப பட்டாசு வகைகள் வைக்கப்படுகின்றன. மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் பரிசு பெட்டி தயாரிக்கப்படுகின்றன அதே சமயம் இந்த பரிசு பெட்டி விலையும் 5 முதல் 10 சதவீதம் விலை உயா்ந்துள்ளது.

பேட்டி:
1.சங்கர் (பரிசு பெட்டி தயாரிப்பாளர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.