தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி இரண்டாம் கட்டமாக காவல் துறையினருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காவல் துறையினர் அனைவரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர், பொதுமக்களுக்குத் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
மேலும், இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 900-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கரோனா தடுப்பூசி மீதுள்ள அச்சத்தை போக்கி பொதுமக்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா இரண்டாம் அலைக்கு வாய்ப்பில்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர்