ETV Bharat / state

ராஜேந்திர பாலாஜிக்கு செக்... ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க தேடல் அடுத்தகட்டமாக விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீஸ் காவல் துறை வழங்கியுள்ளது.

ராஜேந்திர பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

author img

By

Published : Dec 23, 2021, 5:19 PM IST

விருதுநகர்: பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் விருதுநகர் குற்றப்பிரிவு காவல் துறை வழங்கியுள்ளது.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் ராஜேந்திர பாலாஜியைக் கடந்த 17ஆம் தேதிமுதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் எட்டு தனிப்படை அமைத்துத் தேடிவருகிறது.

ராஜேந்திர பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
ராஜேந்திர பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

இந்த நிலையில், கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது. வெவ்வேறு கார்களில் மாறி மாறிச் சென்று தலைமறைவாக உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்தார்.

இதனையடுத்து, தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளி நாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் காவல் துறை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: தலைமை நீதிபதியின் பார்வைக்குச் செல்லும் ராஜேந்திர பாலாஜி வழக்கு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.