தூத்துக்குடி: விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில், கடந்த 18ஆம் தேதி இரவு ஸ்டாலின் பெஞ்சமின் என்பவருக்குச் சொந்தமான மளிகைக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையிலிருந்த ரூ. 80 ஆயிரம் திருடு போனது.
இதனை அறிந்த கடையின் உரிமையாளர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர் நேற்று இரவு விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சைக்கிளில் சுற்றித் திரிந்ததைக் கண்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.மேலும் மளிகைக் கடை திருட்டு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
கையும் களவுமாக பிடிபட்ட திருடன்
மேலும் திருட செல்லும் இடங்களில் உள்ள சைக்கிளை எடுத்து அப்பகுதியில் கடை வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளார். தான் எடுத்த சைக்கிளை வேறொரு இடத்தில் விட்டு விட்டுச் சென்றுள்ளார். சம்பவத்தன்று மீண்டும் அதே பகுதியில் திருடுவதற்காக வந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார். இதனையடுத்து அவரை விளாத்திகுளம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க:வீட்டில் இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 6 சவரன் நகை கொள்ளை