ETV Bharat / state

ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரியை அதிரடியாக விரட்டிப் பிடித்த போலீஸ்!

சாத்தூர் அருகே 20 டன் ரேஷன் அரிசியைக் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

20 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்ற லாரியை அதிரடியாக கைப்பற்றிய போலிஸ்

author img

By

Published : May 27, 2022, 10:32 PM IST

விருதுநகர்: சாத்தூர் போலீசாருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசியத் தகவலை அடுத்து சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் படந்தால் விலக்கு அருகே சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த லாரி நிறுத்தாமல் வேகமாக சென்றதால், போலீசார் லாரியை விரட்டிச் சென்றனர். வேகமாகச் சென்ற லாரியை பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே நிறுத்திவிட்டு, டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.

பின்னால் விரட்டிச்சென்ற போலீசார் லாரியை கைப்பற்றி சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து சோதனை செய்ததில், அதில் சுமார் 400 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. இதன் எடை சுமார் 20 டன் உள்ளதாக தெரியவந்தது.

20 டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்ற லாரியை அதிரடியாக கைப்பற்றிய போலீஸ்

இதனையடுத்து அந்த லாரியையும் கடத்தி கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்த போலீசார் உணவுக்கடத்தல் தடுப்பு அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் கிளீனர் குறித்த விவரம், கடத்தப்பட்ட ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டுவரப்பட்டது ஆகியவற்றின் விவரங்கள் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.7000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற உதவி செயற்பொறியாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.