ETV Bharat / state

சிவகாசி சிறுமி கொலை வழக்கில் அசாம் இளைஞர் கைது! - எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

விருதுநகர்: சிவகாசி அருகே எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

murder accuesd arrest
murder accuesd arrest
author img

By

Published : Jan 24, 2020, 8:48 AM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கடந்த 20ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய எட்டு வயது சிறுமி, வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது காணாமல்போனார். இதையடுத்து அடுத்த நாள் காலையில் அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் சிறுமி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

காவல் துறை விசாரணையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகர் காவல் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு சிறுமியை கொலை செய்த குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஐந்து ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சிறுமியின் கொலையில் சிவகாசி பேரநாயக்கன்பட்டியில் அரிசி பை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிவந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம்அலி (20) என்ற இளைஞருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மஜம்அலியை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் மேலும் ஐந்து பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மூதாட்டி வெட்டிக் கொலை - கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

Intro:விருதுநகர்
23-01-2020

சிவகாசி சிறுமி கொலை வழக்கில்
அசாம் இளைஞர் கைது

Tn_vnr_04_murder_accuesd_arrest_photo_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டார். சிவகாசி அருகே கடந்த 20ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமி, வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது காணாமல்போனார். 21ம் தேதி காலை அப்பகுயில் உள்ள காட்டுப் பகுதியில் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் சிறுமி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். போலீஸ் விசாரணையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சிவகாசி பகுதியில் உள்ள பேரநாயக்கன்பட்டியில் அரிசி பை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அசாம் மாநிலம் நல்பேரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர்அலி என்பவரது மகன் மஜம்அலி (20) என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, சிவகாசி நகர் போலீஸார் மஜம்அலியை இன்று கைது செய்தனர். அதோடு, இவ்வழக்கில் மேலும், 5 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தேடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.