விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா, இவர் திருமண அழைப்பிதல் விற்பனை நிலையம் வைத்துள்ளார். இவரது கடை முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் தனது தண்ணீர் வண்டியை நிறுத்தியுள்ளார். தண்ணீர் வண்டியை கடை முன்பு நிறுத்தினால் வாடிக்கையாளர்கள் எப்படி வருவார்கள் என்று ராஜேஷ்கண்ணா கேட்டுள்ளார்.
இதில் இரண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே தினேஷ் தனது நண்பர்களை வருமாறு அழைத்துள்ளார். உடனே அங்கு வந்த அவரது நண்பர்கள் கடையில் இருந்த ராஜேஷ்கண்ணா, கணேசன், அசோக்குமார், ஜெயவேல்முருகன் ஆகிய நான்கு பேரை கை மற்றும் கால் ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தங்கல் காவல்துறையினர், காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: புதுப்பேட்டை படம் வசனம் பேசிய ஓட்டுநருக்கு கத்திக்குத்து: 2 பேர் சிறையில் அடைப்பு