விருதுநகரில் தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் சார்பில் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசிற்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இரண்டு மருந்துக் கிடங்கு அலுவலர்கள், ஐந்து தலைமை மருந்தாளுநர், 13 மருந்தாளுநர் என்ற அடிப்படையில் பிற மருத்துவ கல்லூரிகளில் இருப்பது போன்று புதிதாக உருவாக்கப்படும் மருத்துவக் கல்லூரியிலும் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்களை பணி அமர்வு செய்ய வேண்டும்.
மேலும், வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதில் அரசு உடனடியாக தலையிட்டு விரைவில் மருந்தாளுநர்களின் பணி நியமனம் செய்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பயிர் காப்பீடு வழங்குவதில் ரூ.40 லட்சம் முறைகேடு - திருவாரூர் விவசாயிகள் குற்றச்சாட்டு!