விருதுநகர்: சாத்தூர் அருகேயுள்ள சுப்பிரமணியாபுரம் பகுதியில் நேற்று (ஜூலை 2) மாலை வீசிய புயல் காற்றுக்கு 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.
இதனால், கிராம மக்கள் இரவு முழுவதும் மின்சாரமின்றி தவித்து வந்தனர். பின்னர், காலையில் ஒரு சில கிராமங்களில் மின்சாரம் சீர் செய்யப்பட்டாலும், பல மின்கம்பங்கள் சீரமைக்கப்படாமல் சாய்ந்தே கிடக்கின்றன.
மின்கம்பங்களை நட்டுவைக்கும்போதே அது சரியாக நடவில்லை என்பதால் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதுபோல் மீண்டும் நிகழாமல் இருக்க நல்ல முறையில், ஆழமாக குழி தாண்டி மின்கம்பங்களை நட வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: பைக்கில் சென்றவர்கள் மீது மின்கம்பம் விழுந்து விபத்து!