ETV Bharat / state

சுமார் 300 சவரன் நகை கொடுத்தும் தீராத வரதட்சணை தாகம்: பெண் கொலை? - Dowry cruelty in Sivakasi

விருதுநகர்: வரதட்சணைக் கொடுமையால் மகளை மாப்பிள்ளை வீட்டார் கொலைசெய்து விட்டதாக பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.

கவிநிலா
கவிநிலா
author img

By

Published : Sep 28, 2020, 11:24 PM IST

மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரது மகள் கவிநிலாவிற்கும் சிவகாசியில் உள்ள பிரபல பேக்கரி கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன் என்பவரது மகன் துளசி ராமிற்கும் 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின்போது 230 சவரன் நகை வழங்கியதுடன் வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்வின்போது 45 சவரன் நகையும் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தையும் 9 மாத பெண் குழந்தையும் உள்ள நிலையில் கணவர் துளசி ராம் தொடர்ந்து மனைவி கவிநிலாவை துன்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிநிலா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டு கணவர் வீட்டிற்குச் செல்லாமல் இருந்து வந்ததாகவும் பின்னர் கடந்த மாதம் கவிநிலாவின் பெற்றோர் வரதட்சணையாக 45 லட்சம் ரூபாய் பணத்தை இன்னும் சில மாதங்களுக்குள் வழங்குவதாக உறுதியளித்து மகளை சிவகாசியில் உள்ள கணவர் வீட்டில் விட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி கவிநிலா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக போன் மூலம் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது வீட்டிற்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் உயிரிழந்த நிலையில் கவிநிலாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

"வீட்டிற்குள் தூக்கிட்டு இறந்ததற்கான எந்தவித தடயமும் இல்லை. எனது மகளின் கழுத்தில் காயமும் இல்லாத நிலையில் உடல் காரில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் எனது மகளின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது, வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி கொலைசெய்து விட்டனர்.

பின்னர் தற்கொலை செய்துகொண்டதாக மகளின் கணவர், அவரது பெற்றோர் நாடகமாடுகின்றனர். எனது மகள் இறப்பிற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்" என சிவகாசி நகர் காவல் நிலையத்தில் ஆறுமுகச்சாமி புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறை தரப்பில் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்றுவருகிறது.

இதனிடையே காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து துளசி ராம், அவரது பெற்றோரை கைதுசெய்ய வேண்டும் எனவும் வருவாய்க் கோட்டாட்சியர் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் பெண்ணின் பெற்றோர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.