ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த கனமழையால் 150-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் 150-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமாகியுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று பெய்த கனமழையால் 150-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

author img

By

Published : May 1, 2020, 9:45 PM IST

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் - ஸ்ரீவில்லிபுத்தூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

150-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

இதனால் மம்சாபுரம் பகுதியில் மாடசாமி என்பவருக்குச் சொந்தமான வாழைத்தோப்பில் அரை விளைச்சலில் விளைந்திருந்த 150-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கீழே விழுந்து சேதமானது. இதனால் விவசாயிக்கு 2 லட்சம் ரூபாய் வரை, நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இனிப்பிற்கு இனிப்பு சேர்த்த புவிசார் குறியீடு - கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு வைர மகுடம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.