ETV Bharat / state

விபத்தில் இறந்த புதுப்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் - Virdhunagar district news

விருதுநகர்: விருதுநகர் அருகே திருமணமான 4 நாள்களில் விபத்தில் உயிரிழந்த புதுப்பெண், தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் இறந்த புதுப்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

author img

By

Published : Jun 18, 2021, 11:15 PM IST

விருதுநகர் மாவட்டம் ம. ரெட்டியாபட்டி அருகே கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர் ராஜ் என்பவருக்கும், சுத்தமடம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகள் முத்துமாரி என்பவருக்கும் கடந்த 13ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் புதுமணத் தம்பதியர் இருவரும் 16ஆம் தேதி அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் உள்ள உறவினர் வீட்டு விருந்திற்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வரும்பொழுது மணப்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

இந்நிலையில் 17ஆம் தேதி அப்பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ம. ரெட்டியாபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவரது இரண்டு சிறுநீரகம், இதயம், லிவர் வாழ்வு, நுரையீரல், போன்றவை அவரின் குடும்பத்தாரின் சம்மதத்துடன் தானமாகப் பெறப்பட்டுள்ளது.

மேலும் கண்தானம் கரோனா காலம் என்பதால் தவிர்க்கப்பட்டுள்ளது.

திருமணமான நான்கே நாள்களில் புது மணப்பெண் விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.