ETV Bharat / state

கருணாநிதியாலேயே முடியவில்லை; ஸ்டாலினால் எப்படி முடியும் - ஓ.பன்னீர் செல்வம் - தேர்தல் பரப்புரை

விருதுநகர்: அதிமுகவை உடைக்க கருணாநிதியாலேயே முடியவில்லை. பிறகு ஸ்டாலினால் எப்படி முடியும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்
author img

By

Published : Apr 8, 2019, 9:48 AM IST

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவின் வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, ”நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை கடந்த ஆட்சியில் யார் நல்ல ஆட்சி தந்தார்கள் என்று பார்த்தும், மக்கள் பிரச்னையை தீர்ப்பவர்கள் யார் என்பது குறித்தும் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அதிமுக கட்சி ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்டது. அதிமுகவை பூகம்பம் சுனாமியால்கூட அசைக்க முடியாது. 2030ஆம் ஆண்டுக்குள் வீடில்லா அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டிதரப்படும்.

ஸ்டாலின் முதலமைச்சரையும், அமைச்சர்களையும் தரக்குறைவாக பேசிவருகிறார். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.

அதிமுகவை உடைக்க கருணாநிதியாலேயே முடியவில்லை. பிறகு ஸ்டாலினால் எப்படி முடியும்.

ஸ்டாலின் முதலமைச்சராக, ஜோதிடரிடம் கேட்டு பல வேஷங்கள், பல கலர் சட்டைகள் அணிந்து உலாவி வருகிறார். ஸ்டாலின் டீ கடையில் டீ குடித்தார். நான் டீ கடையே நடத்தி வந்துள்ளேன். அவரது பாச்சா நம்மிடம் பலிக்காது” என்றார்.

விருதுநகர்
07-04-19

ஸ்டாலின் அவர்களே உங்கள் தந்தை கருணாநிதியால் முடியாதது உங்களால் முடியவே முடியாதது- துணை முதலமைச்சரும் ஓ.பன்னீர் செல்வம் கிண்டல் 

ஸ்டாலின் முதலமைச்சராக ஜோசியரிடம் கேட்டு பல வேசங்கள் பல கலர் சட்டைகள் அணிந்து உலவி வந்தார் அவர் தந்தையான கருணாநிதியால்  கூட அதிமுகவை அகற்ற முடியவில்லை அது ஸ்டாலின் முடியவே முடியாது  என விருதுநகரில் நடந்த பரப்புரையில்தமிழக  துணை முதலமைச்சரும் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு 

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில்  அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவின் வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் விருதுநகரில் அல்லம்பட்டி பகுதியில் முரசு சின்னத்தில் வாக்கு கேட்டு தேர்தல் பிராச்சாரம் செய்தார்

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரைகடந்த ஆட்சியில் யார் நல்ல ஆட்சி தந்தார்கள் என்று பார்த்தும் மக்கள் பிரச்சனையை தீர்ப்பவர்கள் யார் என்று உங்களுக்கே தெரியும்

காங்கிரஸ் கூட்டணியில்  திமுக அமைச்சரவையில் இடம் பெற்று 10 ஆண்டுகளாக 9 அமைச்சர்களுடன் திமுக காங்கிரஸ் கூட்டணி கொண்டுவந்த ஒரே திட்டம் சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் மக்கள் பணம் 40000 கோடியை கடலில் கொண்டு போய் கொட்டியதுதான் சேது சமுத்திர திட்டம் பயன் அற்ற திட்டம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா எடுத்துச்சொலியும் யாரும் கேட்க வில்லை  1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  அதிமுக கட்சி ஒன்ரை கோடி  தொண்டர்கள் என்ற விழுதுகள் தமிழகம் எங்கும் பரவிய அதிமுகவை பூகம்பம் சுனாமியால் கூட அசைக்க முடியாது

2030 ஆம் ஆண்டுக்குள் வீடில்லா அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டிதரப்படும் இது வரை 6 லட்சம் வீடுகள் கட்டிதரப்பட்டுள்ளன.
பெண்களுக்கு திருமண நிதி உதவி 50 ஆயிரம் 8 கிராம் தங்கம்  கொடுத்துள்ளோம் பேறுகால நிதியை 12000ல் இருந்து 18000ம் ஆக உயர்த்தியுள்ளோம் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி மானியம் என பெரியாரின் கொள்கையை அம்மாதான் நிறைவேற்றினார். ஏழைகளுக்கு வழங்க வேண்டிய 2000 ரூபாயை கூட திமுக சூழ்ச்சி செய்து வழக்கு தொடர்ந்து நிறுத்திவிட்டது இந்த தேர்தல் முடிந்த உடன் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை நீக்கி அனைவருக்கும் 2000 வழங்கப்படும். ஸ்டாலின் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் தரக்குறைவாக பேசி வருகிறார். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு செயல் பட்டு வருகிறது ரம்ஜான் பண்டிகைக்கு 45 மெட்ரிக் டன் இலவச அரிசி ஹஜ் மானியம் என ஏகப்பட்ட திட்டங்களை வழங்கியவர் அம்மா. 1972 ல் ஆரம்பிக்க பட்ட அண்ணா திமுகவை அம்மா இருக்கும் போதே பல சூட்சிகள் செய்து கருணாநிதி கூட்டம் உடைக்கப்பார்த்தது கருணாநிதியாலே முடியாததை ஸ்டாலினால் எப்படி செய்யமுடியும் புயல் வந்தாலும் சுனாமி வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது.
ஸ்டாலின் முதலமைச்சராக ஜோசியரிடம் கேட்டு பல வேசங்கள் பல கலர் சட்டைகள் அணிந்து உலவி வந்தார் அவர் தந்தையான கருணாநிதியால்  கூட அதிமுகவை அகற்ற முடியவில்லை அது ஸ்டாலின் முடியவே முடியாது. ஸ்டாலின் டீ கடையில் டீ குடித்தார் நான் டீ கடையே நடத்தி வந்துள்ளேன் அவரது பாச்சா நம்மிடம் பலிக்காது. 

TN_VNR_2_7_OPS_SPEECH_VISUAL_7204885
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.