விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே அயன் கொல்லங்கொண்டான் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளத்தாய் (80). ஆஸ்துமா நோயால், கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். தற்போது கரோனா வைரஸ் தொற்று அதிகாரித்து வரும் நிலையில், தனக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சத்தில் ஊரின் எல்லை பகுதியில் உள்ள தன்னாசி என்பவருக்குச் சொந்தமான தோப்பில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தூர் ஊரக காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் விழுந்த மூதாட்டியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மூதாட்டி உடல்நிலை பிரச்னை விரக்தியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.