விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தாக பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகினர்.
அப்போது பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இருந்து விரைவில் விடுதலை செய்யக்கோரி மொட்டையடித்து வந்து நீதிபதியிடம் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, அடுத்த மாதம் 4ஆம் தேதி மூன்று பேரும் வழக்கறிஞருடன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தார். பேராசிரியை இரண்டாவது முறையாக மொட்டையடித்துக்கொண்டு விசாரணைக்கு ஆஜராவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கதறி அழும் உதவிப் பேராசிரியை -ஐந்து நபர்கள் மீது வழக்குப்பதிவு